Back

கடும் புகைமூட்டம்: திமோர் லெஸ்ட்டேவில் பள்ளிகள் மூடல்

Story illustration

15 Oct 2026 - 8:10 pm

தில்லி: இந்தோனீசியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக ஏற்பட்டுள்ள மோசமான புகைமூட்டத்தால், திமோர் லெஸ்ட்டே வியாழக்கிழமை (அக்டோபர் 15) முதல் மூன்று நாள்களுக்குப் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் தில்லியில், மஞ்சள் நிறமாக மாறிய வானத்தின்கீழ் வழக்கம்போல் மக்கள் நடமாட்டம் இருந்தபோதிலும், அரசாங்கத்தின் அறிவுறுத்தலின்படி பெரும்பாலானோர் முகக்கவசங்களை அணிந்திருந்தனர்.

வாரத்தின் தொடக்கத்தில் காற்று மாசுபாடு இன்னும் மோசமாக இருந்ததாகத் தெரிவித்த அந்நாட்டு மக்கள், அந்நாட்டு அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தை வரவேற்றுள்ளனர்.

“தில்லியில் காற்று மாசுபாடு மிகக் கடுமையாக உள்ளது. எங்களால் சூரியனைக்கூடப் பார்க்க முடியவில்லை,” என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் 30 வயது மகப்பேற்றுத் தாதி சோனியா டா கோஸ்டா சோரெஸ் தெரிவித்துள்ளார்.

தமது குழந்தை இன்னும் பள்ளி செல்லும் வயதை அடையவில்லை என்றாலும் குழந்தைகள் ஆபத்தில் சிக்காமல் இருக்க மாணவர்களை வீட்டிலேயே இருக்கவைக்கும் முடிவு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தோனீசியாவில் நச்சுப் புகைமூட்டத்தைக் கலைக்க உலர் பனிக்கட்டி தெளிப்பு

15 Oct 2026 - 7:35 PM

Back
Share this story

Get the daily newsletter →

Ask globalread.info

AI news & website helper
What would you like to explore?

I can find stories, explain headlines, or help you use globalread.info.

AI can make mistakes. Check the linked sources. Questions are sent to OpenAI.